லாஹிரி
மகாசயர் தன் வயதான காலத்தில், இளவயதுத் தோற்றத் துடனிருக்கும் பாபாஜியின்
தகப்பனார் என்று கூறப்படுமளவிற்கு
சில சமயங்களில் இவ்வுருவ
ஒற்றுமை மிக ஆச்சரியமாக இருந்தது.
ஸ்வாமி
கேவலானந்தர் இமாயலத்தில் பாபாஜியுடன்
சில காலம்
கழித்திருக்கிறார்.
“இணையற்ற
அந்த மகான் தன் குழுவுடன் மலைகளில்
இடம் விட்டு இடமாகச் சென்று கொண்டிருப்பார்,”
என்று ஸ்வாமி கேவலானந்தர்
என்னிடம் கூறினார். “பாபாஜி
தான் விரும்பும் பொழுது மட்டுமே மற்றவர்கள்
அவரைக் காண்பதோ அல்லது அடையாளம் கண்டு கொள்வதோ சாத்தியம்.
அவர்
தன் வெவ்வேறு பக்தர்களுக்கு சிறு மாறுதல்களுடன்
அனேக உருவங்களில் – சில சமயங்களில்
தாடி, மீசையுடனும் சில சமயங்களில்
அவை இல்லாமலும் – தரிசனம் தந்திருப்பதாக
அறிகிறோம்”. “சிதைவு அடைய முடியாத அவரது உடலிற்கு
உணவு ஏதும் அவசியமில்லை.
ஆதலால்,
அவர் அரிதாகவே உண்கிறார். சமுதாய
வழக்கத்திற்கேற்ப அவரிடம் வரும் சீடர்களிடமிருந்து
எப்பொழுதாவது பழங்களையும்,
பாலும் நெய்யும் கலந்து சமைத்த
அன்னத்தையும் ஏற்றுக் கொள்வதுண்டு”.
“பாபாஜியின்
வாழ்க்கையில் நடந்த இரு அற்புதமான
சம்பவங்களைப் பற்றி நான் அறிவேன்,”
கேவலானந்தர்
தொடர்ந்தார், “ஒரு புனித வேதச்
சடங்கிற்காக ஓர் இரவு அவருடைய சீடர்கள்
சுட்டெரியும் பெருந்தீ உள்ள அக்னி குண்டத்தைச்
சுற்றி உட்கார்ந்திருந்தனர். குருவானவர்
திடீரென்று ஒரு பெரிய கொள்ளிக்
கட்டையை
எடுத்து அக்னிக்கருகில் அமர்ந்திருந்த
ஒரு சீடனின் வெறும் தோளில் லேசாகத்
தட்டினார்.
“ஐயா,
எவ்வளவு கொடூரம்!” அங்கிருந்த லாஹிரி
மகாசயர் இந்த ஆட்சேபணையை வெளியிட்டார்.
“அவனுடைய
முந்தைய கர்ம வினைப்படி உன் கண்
எதிரிலேயே அவன் எரிந்து சாம்பலாகிப் போவதை
நீ பார்க்க வேண்டும்?”இந்த வார்த்தை
களுடன் பாபாஜி தன் குணப் படுத்தும்
கரத்தை உருக்குலைந்திருந்த தன் சீடனின்
தோளின் மேல் வைத்தார். “வேதனை நிறைந்த
மரணத் திலிருந்து உன்னை நான் இன்றிரவு
விடுவித்து விட்டேன். இந்நெருப்பினால்
உனக்கு நேர்ந்த சிறு துன்பத்தின்
மூலமாக கர்மவினையின் விதியானது
திருப்திப் படுத்தப்பட்டுவிட்டது.”
இன்னொரு
சமயத்தில் பாபாஜியின் புனிதமான குழுவில்
அன்னியன் ஒருவனின் வரவினால் இடையூறு
விளைந்தது. குருவின் கூடாரத்திற்கருகே
ஏறுவதற்குரிய ஒரு பாறையின்
விளிம்பின் மீது வியக்கத்தக்க திறனுடன்
அவன் ஏறி வந்துவிட்டான்.
“ஐயா,
தாங்கள்தான் மகா பாபாஜியாக இருக்க வேண்டும்”
அம்மனிதனின் முகம் விண்டுரைக்க இயலாத
ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது.
“செல்வதற்கரிய
இச்செங்குத்து மலைப்பாறைகளில்
மாதக் கணக்கில் இடை விடாமல்
தங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
தயை செய்து என்னைத் தங்கள் சீடனாக்கிக்
கொள்ள மன்றாடுகிறேன்.” மகா
குரு பதிலொன்றும் கூறாமலிருக்கவே அம்மனிதன்
விளிம்பின் கீழே பாறைகளால் ஓரம்கட்டப்பட்ட
பெரிய பிளவைச் சுட்டிக் காட்டினான். ‘நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளா விடில்
நான் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன்.
கடவுளை அடைய உங்கள் வழிகாட்டு
தலை நான் பெறாவிடில் இனி வாழ்ந்து
பயனில்லை.’ “அப்படியானால்
குதி, உன் தற்போதைய வளர்ச்சி
நிலையில் நான் உன்னை ஏற்க முடியாது,”
பாபாஜி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல்
கூறினார். அம்மனிதன்
உடனேயே அந்தச் செங்குத் தான பாறையைத்
தாண்டிக் குதித்து விட்டான்.
அதிர்ச்சியுற்ற
தன் சீடர்களிடம் அந்த அன்னியனின்
உடலைக் கொண்டு வரும்படி பாபாஜி
கட்டளையிட்டார்.
அவர்கள்
உருக்குலைந்திருந்த அவ்வுடலுடன் திரும்பியவுடன்
குருதேவர் தன் கையைஇறந்து
விட்ட அம்மனிதனின் மீது வைத்தார். அவன்
தன் கண்களைத் திறந்து சர்வ வல்லமை பெற்ற
குருவின் முன்னர் தாழ்மையுடன் நெடுஞ்
சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.
“நீ
இப்பொழுது என் சீடனாகத் தயாராக உள்ளாய்”
உயிர்ப்பிக்கப்பட்ட அந்த சீடனை நோக்கி
பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார். ‘நீ மிக்க
தீரத்துடன் கடுமையான பரீட்சையில் தேறிவிட்டாய்.
மரணம் உன்னை மறுபடி தீண்டாது;
அழிவற்ற எங்கள் குழுவில் இப்பொழுது
நீயும் ஒருவன்’. “இயசுவிற்கு
முதலிலிருந்தே தன் வாழ்க்கைச் சம்பவங்களின்
நிகழ்வு நிரல் தெரிந்தே இருந்தது.
அவர் தம் வாழ்க்கையில் ஒவ்வொரு
நிகழ்ச்சியையும்
ஏற்றது அவருக்காக அல்ல;
எந்த
கர்ம வினையின் கட்டாயத்தினாலும் அல்ல.
ஆனால் சிந்தனையுள்ள மனிதர்களை மேம்படுத்த
வேண்டும் என்பதற் காகவேதான். விவிலிய
போதனையாளர் நால்வர் – மத்தேயு, மாற்கு,
லூக்கா, யோவான் – பின்னால் வரும் தலைமுறைகளுக்காகவே
விவரிக்க முடியாத அந்த
நாடகத்தை ஏட்டில் பதித்தார்கள். பாபாஜிக்கும்
கூட இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம்
ஆகிய சார்புகள் கிடையா. ஆரம்பத்திலிருந்தே
அவருடைய வாழ்வின் கட்டங்களையும்
அவர் அறிந்திருந்தார்.