ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Sunday 29 May 2016

மகாஅவதார் பாபாஜி - பகுதி- 3


                 
 
ஓர் அவதார புருஷர் உலக நடப்பிற்கு உட்பட்டவரல்லர். ஒளி பிம்பமாகத் தோன்றும் அவரது பரிசுத்தமான தேகம் இயற்கைக்கு எவ்வகையிலும் கடன்படுவதிலிருந்து விடுதலை பெற்றுள்ளது. பாரதத்தில் பாபாஜியின் நோக்கம், தீர்க்கதரிசிகளுக்கு அவர்களுடைய சிறப்புக் காரியங்களை நடத்த உதவுவதாகும். எனவே, அவர் சமய நூல்களில் வகைப் படுத்தியுள்ள மகாவதாரம் என்ற பிரிவிற்குப் பொருந்தியவராகிறார். சன்னியாச பரம்பரையைத் திருத்தி அமைத்த ஆதிசங்கரரும், புகழ்பெற்ற மத்திய கால
மகானான கபீருக்கும் பாபாஜி யோக தீட்சையை அளித்ததாகக் கூறியுள்ளார். நமக்குத் தெரிந்த வரையில், மறைந்து விட்டிருந்த கிரியா கலையை மறுமலர்ச்சி பெறச் செய்த லாஹிரி மகாசயர், பாபாஜியின்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கிய சீடராவார்.
 
பாபாஜி கிறிஸ்துவுடன் என்றும் தொடர் புள்ளவர். அவர்களிருவரும் சேர்ந்து மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகளை அனுப்பிய வண்ணம்
உள்ளனர். மேலும் இந்த யுகத்திற் கான முக்தியளிக்கும் ஆன்மீக யுக்தியையும் திட்டமிட்டுள்ளார்கள்.

 பூரண அனுபூதி பெற்ற இவ்விரு குருமார்களின் – உடலுடன் ஒருவரும்,
உடலின்றி ஒருவரும் செய்துவரும் பணியானது, யுத்தங்கள், இனத்து வேஷம், மத உட்பிரிவுகள், எறிந்தவனையே திரும்பத் தாக்கும் (Boomerang) லோகாயத் தீமைகள் ஆகியவற்றைத் தவிர்ப் பதற்காக உலக
நாடுகளை ஊக்குவித்தலாகும்.

பாபாஜி நவீன காலத்தின் போக்கை, முக்கியமாக மேலை நாகரிகத்தின் செல்வாக் கையும் சிக்கல்களையும் நன்கு அறிந்தவர்.
மேலும் ஆத்ம விடுதலைக்கான யோகத்தை மேலை மற்றும் கீழை நாடுகளில் சமமாகப் பரப்ப வேண்டிய அவசியத்தை உணர்கிறார்.
வரலாற்று ஏடுகளில், பாபாஜி பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லையே என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்க வேண்டியதில்லை.
அந்த மகான் எந்த நூற்றாண்டிலும் வெளிப்படையாகத் தென்பட்டதில்லை.
அவருடைய, சகாப்தங்களுக்கேற்ற திட்டங்களில் தவறாகக் கணிக்கப்படும் விளம்பர வெளிச்சங்களுக்கு இடமில்லை. தனித்த ஆனால், மௌன சக்தியான படைப்பவனைப் போலவே பாபாஜி எளிய மறைவிலேயே
செயல்படுகிறார்.

 ஒரு வரலாற்று நிபுணருக்குப் பிரிய மானவைகளான, பாபாஜியின் குடும்பம், பிறந்த இடம் இவைகளை அறுதியிட்டுக் கூறும் எந்த விவரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக, அவர் பேச்சு இந்தியில் இருக்கிறது. ஆனால் அவர் எம்மொழியிலும்
சுலபமாக உரையாடுகிறார். பாபாஜி (வணக்கத்திற்குரிய தந்தை) என்ற எளிய பெயரையே அவர் ஏற்றுள்ளார்.

லாஹிரி மகாசயரின் சீடர்களால் அவருக்குஅளிக்கப்பட்ட மரியாதையைக் குறிக்கும் பட்டங்கள்; மகாமுனி பாபாஜி மகராஜ் (உயர்ந்த பேரானந்தப் பெருமான்), மகாயோகி (உயர்ந்தயோகி) மற்றும் த்ரயம்பக் பாபா அல்லது சிவபாபா (சிவ அவதாரங் களின் பட்டங்கள்) முதலியன.
முழுமையாக விடுதலை அடைந்து விட்ட ஒரு மகானின் பரம்பரைப் பெயரைப் பற்றி நமக்குத் தெரியா விட்டால்தான் என்ன? “பாபாஜியின் பெயரை பக்தி யுடன் யார் எப்பொழுது உச்சரித் தாலும் அந்த பக்தன்
அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசையை ஈர்க்கிறான்,” என்று லாஹிரி மகாசயர் கூறியுள்ளார்.

சிரஞ்சீவித் தன்மை பெற்ற இந்த குரு, அவரது உடலில் வயதைக் குறிக்கும் அடையாளங்களைப் பெறவில்லை. அவர் இருபந்தைந்து வயதிற்கு மேற்படாத இளைஞராகவே தோற்றமளிக்கிறார்.
சிவந்த நிறமும், நடுத்தர உயரமும், பருமனுமுள்ள பாபாஜியின் எழிலும் வலுவும் கொண்ட தேகம், காணக் கூடிய பிரகாசத்தை வீசுகிறது. அவருடைய கண்கள் கருமையும்,சாந்தமும், கருணையும் கொண்டுள்ளன.
நீளமான, ஒளிரும் கேசம் தாமிர நிறத்தில் உள்ளது.
சில சமயங்களில் அவருடைய முகம் லாஹிரி மகாசயருடையதை மிகவும் ஒத்திருக்கிறது.