ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Saturday, 28 May 2016

மகாஅவதார் பாபாஜி - பகுதி- 2


               

பொதிகை மலையில் ஒளி உடலுடன் வாழ்ந்துவரும் போகரின் குருவான
அகத்தியரிடம் கிரியா யோகத்தின் கடைசி தீட்சையைப் பெற திருகுற்றால மலையை அடைந்தார். (அகத்தியரே ஆதிகுருவும், கிரியா யோகத்தின் மூலகுருவும் ஆவார்.) குற்றால மலையில் பாபாஜி அகத்தியரை நினைத்து 48 நாள் கடுந்தவம் புரிந்தார். 48ம் நாள் முடிவில் அகத்தியர் ஒள உடலோடு அவர் முன் தோன்றி அவரை உள்ளம் குளிர வாழ்த்தி அருளினார். அதோடு "மகனே நீ இமய மலைக்கு சென்று பத்ரிநாத்தில் தங்கி தவவாழ்க்கை வாழ்ந்து வருவாயாக" "நீ இது வரை உலகம் காணாத அளவிற்கு மிகப்பெரிய சித்த புருஷனாக உயர்ந்து உலகம் உள்ளளவும்
வாழ்ந்து வருவாய்" என்று வாழ்த்தி மறைந்தார்.

 ஆதிகுரு அகத்தியர் ஆணைப்படி பாபாஜி இமய மலையின் ஒரு முகட்டில் தவக்குடில் அமைத்துக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். பாபாஜியின் தவக்குடில் இமயமலையில் 10000 அடி உயர்த்திற்கு மேல்
உள்ள பத்ரி நாத் கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. அந்த தவக்குடிலுக்கு கொரிசங்கர் பீடம் என்று பெயர்.

 பாபாஜி தம் இமாலய வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்கு பாரத நாட்டிற்கு வந்து செல்கிறார். கிரியா யோகத்தின் விளைவாக அவரது உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் தெய்வீக அணுக்களாய் மாறி விட்டது. பத்ரிநாத்தில் சொரூப சமாதியடைந்த இவரைப் பற்றி வெளி உலகுக்கு அறியக் கிடைத்த தகவல்கள் வெகு சிலவே. ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட க்ரியா யோகத்தை முன்னெடுத்துச் செல்லும் மாபெரும் ஆசிரியர் பாபாஜி. இரண்டாயிரம் ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாயோகி. இவர் க்ரியா பாபாஜி, பாபாஜி நாகராஜ், மகாவதார பாபாஜி, சிவாபாபா என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர். சாவை வென்று, என்றும் பதினாறு வயதினராக வாழும் பாபாஜி ஒரு மாபெரும் சித்தர். மகா அவதாரம் 
என்று போற்றப்படுபவர்.
 
உலகம் முழுவதும் தெய்வீகப் பேரருள் பொழியச் செய்வதே பாபாஜியின் முக்கிய பணி. இது தூய அன்புடன் தன்னலமற்ற தொண்டு செய்பவர்கள் மூலமாக உலகுக்கு வெளிப்படுகிறது. தனது சகோதரி மாதாஜி நாகலட்சுமி தேவியாருடன் பத்ரிநாத்தில் உள்ள தனது ஆச்சிரமத்தில் வாழ்ந்து வருகிறார் பாபாஜி.

பத்ரிநாராயணுக்கருகில் வடக்கு இமய மலையின் செங்குத்தான பாறைகள் லாஹிரி மகாசயரின் குருவான பாபாஜி வாழும் பேற்றை இன்னும் பெற்றிருக்கின்றன. தனிமையில் வாழும் அந்த மகான் தன் ஸ்தூல ரூபத்தைப் பலநூற்றாண்டுகளாக, ஒருகால் பல்லாயிரம் ஆண்டுகளாகவோ வைத்துக்கொண்டிருக்கிறார். மரணமற்ற பாபாஜி ஒர் அவதாரமாவார்.

 “மனிதனின் குறுகிய பார்வை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட நட்சத்திரமாகிய அவரை ஊடுருவிப் பார்க்க முடியாது. அந்த அவதாரம் அடைந்துள்ள நிலையை ஒருவன் ஊகிக்க முயல்வது கூட வீண்தான். அது கற்பனைக்கு அப்பாற்பட்டது.” உபநிஷதங்கள் ஆன்மீக முன்னேற்றத் தின் ஒவ்வொரு நிலையையும் நுட்பமாகப் பிரித்து வகைப்படுத்தியிருக்கின்றன. ஒரு சித்தர் (பூரணத்துவம் அடைந்தவர்) என்பவர் ஜீவன் முக்தர் (வாழும் பொழுதே முக்தியடைந்தவர்) என்ற நிலையிலிருந்து பராமுக்தர் (தலையாய முக்தி – மரணத் தின் மீது முழு ஆதிக்கம்) நிலைக்கு முன்னேறியவர்.
 
 இந்த இரண்டாவது நிலை யில் உள்ளவர் மாயையின் வலையி லிருந்தும் அதனுடைய பிறவிச் சுழற்சியிலிருந்தும் முழுவதுமாக தப்பி விட்டவராவார்.

 ஆதலால், பராமுக்தர் அரிதாகவே ஸ்தூல தேகத்திற்குத் திரும்புகிறார். ஒருவேளை அப்படித் திரும்பினால் பூவுலகிற்கு வானுலக அருளின் சாதனமாக தெய்வீக நியமனம் பெற்ற ஓர் அவதாரமாகிறார்.

No comments:

Post a Comment