ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Saturday 28 May 2016

மகாஅவதார் பாபா ஜி - பகுதி- 1




            
பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய “THE AUTO BIOGRAPHY OF A YOGI” என்கிற நூல், யோகக் கலையின் அதிநுட்பங்களை உலகுக்கு உணர்த்திய ஒரு அற்புதமான புத்தகம். ‘ஒரு யோகியின் சுய சரிதம்’ என்று தமிழில்
வெளிவந்துள்ள இப்புத்தகம், பாபாஜி பற்றிய அறிய தகவல்கை அளிக்கிறது.

இதோ அதிலிருந்து சில பகுதிகள்…

பாபாஜி தனது
மனித எல்லையைக் கடந்த ஓர் மாபெறும் சித்தராவார். இவர் மனிதகுலத்தின் ஆன்மீக வளர்ச்சிக்காகப் பின்னணியில் அமைதியாக
தனது பணியினை செய்து வருகிறார். மேலும், லாஹிரி மஹாஸாயருக்கு 1861ஆம் ஆண்டு மிகவும் சக்தி வாய்ந்த யோக யுக்திகளான கிரியா யோகாவை கற்பித்தவரும் பாபாஜியே ஆவார் என யோகானந்தர் குறிப்பிடுகிறார்.

பாபாஜி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கி.பி.30.11.1203 அன்று கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருநாளன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷபராசி கூடிய சுப வேளையில் பிறந்தார். அவருடைய குழந்தை திருநாமம் நாகராஜ். நாகராஜ் என்பதற்கு ‘பாம்புகளின் அரசன்’ என்று பொருள்.

நம்பூதரி பிராமணர்களான இவரது பெற்றோர்கள், தென்மேற்கு மலபார்
பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்தனர். இவரது தந்தை, அங்கிருந்த
சிவன் கோவிலில் அர்ச்சகராக இருந்தார். இப்பொழுது அக்கோவில் முருகனுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

நாகராஜ், தனது ஐந்தாவது வயதில், சிவன் கோவிலில் விளையாடிக்  கொண்டிருந்த போது, ஒரு வணிகனால் கடத்தப்பட்டு இன்றைய
கோல்கத்தாவிற்கு ஒரு அடிமையாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, ஒரு பணக்கார வர்த்தகர் அவனை விலைக்கு வாங்கி பிறகு, சிறிது நாட்களில் முழு சுதந்திரத்துடன் விடுவித்தார். பிறகு, சுற்றித் திரிகிற துறவிகளின் குழுவில் சேர்ந்து புனிதமான சமய மற்றும் தத்துவ இலக்கிங்களில் தேர்ச்சி பெற்றார். இதில் நிறைவு பெறாத நாகராஜ், தெற்கே வாழ்ந்து வந்த பூரணத்துவம் பெற்ற மஹா சித்த அகஸ்த்தியரைப் பற்றி அறிந்து கொண்டு, அவரைக் காண தெற்கு சிலோனிலுள்ள புனிதமான கத்திர்காமக் கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

அவருக்கு 11 வயதானபோது கி.பி.1216ல் இலங்கை சென்று கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் மகா சித்தர் போக நாதரை சந்தித்தார். பாபாஜி கி.பி.1203 ல் தம் பிறப்பு கி.பி. 1216 கதிர்காமம் சென்று போகரை சந்தித்தது பற்றியும் கி.பி.1952ல் ஒளி உடலோடு சென்னை வந்து எழும்பூர், சூரம்மாள் தெரு, 9ம் எண் வீட்டிலுள்ள தம் சீடர் V.T நீலகண்டன் பூஜையறையில் அவரை சந்தித்து அவரிடம் பலமுறை கூறியுள்ளார். போகநாதர் கதிர்காமம் தேவாலயம் முருகன் கோவிலாக எழுவதற்கு முன் அந்த கோவிலில் இரண்டு முக்கோணங்களாலான மிகவும் சக்தி வாய்ந்த ஒரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார்.

கதிர்காமம் திருக்கோவிலின் மூலஸ்தானத்தில் இப்போதும் உருவச்சிலை கிடையாது. அந்த யத்திரத்திற்குத்தான் வழிபாடு நடக்கின்றன.) கதிர்காமம் சென்ற பாபாஜி அங்கு மகா சித்தர் போக நாதரை குருவாக அடைந்தார்.

மிகப்பெரிய ஆலமரத்தடியில் போக நாதர் அவருக்கு தொடர்ந்து 6 மாத காலம் கிரியா யோகப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. இப்பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள், பல்வேறு பிராணயாமப் பயிற்சிகள்தியானமுறைகள் ஆகியவை அடங்கும். இந்த
தவயோக பயிற்சி ஒவ்வொரு  24 மணி நேர பயிற்சியாக தொடர்ந்தது. பிறகு விட்டு விட்டு இரண்டு அல்லது மூன்று
நாடகளுக்கு ஒரு முறை என்று வளர்ந்தது.
  
இது வார கணக்காக பெருகி இடைவிடாமல் 48 நாட்களுக்கு செய்யும் அளவிற்கு உயர்ந்தது. ஆறு மாத முடிவில் பாபாஜியின் மனதில் ஐம்புலன்களின் வழியே உலகியலோடு தொடர்பு கொள்ளும் நிலை அகன்றது. வேறு வகையில் கூறினால் மனிதனின் 36 தத்துவங்களில் 20 தத்துவங்களால் ஆன மனோதேகமே அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அல்லது அவரது மனித மனம் அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள்
வந்தது.

பாபாஜி ஒளி உடலோடும் பூத உடலோடும்வாழும் மனிதராகவே விட்டார். எல்லா தத்துவங்களையும் ஏகத்துவமான ஆன்மாவே தான் என்பதை உணர்ந்தார். அதன்மூலம் தாம் வேறு பரம்பொருள் வேறு அல்ல என்பதை
தெளிவாக உணர்ந்து விட்டார்.

தன்னை உணர்ந்த பாபாஜி கி.பி.1214 லிலேயே தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்க இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார்.

No comments:

Post a Comment