ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Monday 23 May 2016

தமிழின் தலைவன்



           
               தமிழ் என்பது என்ன? சிவன் என்பது யார்?

தமிழ் என்பது சிவபெருமான் உருவாக்கிய மொழி.சிவனின் டமருக்கில் ஒலித்த நாதத்தில் பிறந்த மொழியே பிள்ளைத்தமிழ். தமிழின் அழகில் மயங்கிய சிவன் உலகம் முழுவதுக்கும் தான் கடவுள் என்பதை மறந்து "தென்னாடுடைய சிவனே போற்றி" என சொல்லும் அளவுக்கு அதன் மேல் காதல்கொண்டு மேருமலையை மறந்து தமிழ்நாட்டில் தங்கிவிட்டான்.
சைவத்தில் சிதம்பரம் மிகவும் புகழ் பெற்ற ஸ்தலமாகும்.கோயில் என சைவர்கள் சொல்லுவது சிதம்பரத்தைத்தான். சிதம்பரம் என்றால் "சித்தம் பரம்" என சித்தம் முழுவதும் எங்கும் நிறைந்த அந்த பரத்தையே தியானிப்பது என்றுதான் பொருள்."சதா சிவம்" என்பதும் அந்தப்பொருளில் தான் வரும்(சதா சிவம் என இருப்பது சதாசிவம்)

சிதம்பரம் நடராஜன் முத்தமிழுக்கும் தலைவன்.குறிப்பாக ஆடல் கலையின் நாயகன் நடராஜனே. நடராஜன் என்றாலே 'நடனத்துக்கு ராஜன்' என்றுதான் பொருள்.நடராணி என பார்வதி தேவியை சொல்லுவதில்லை.

தமிழ் மேல் காதல் கொண்ட சிவன் தமிழ்நாட்டில் சும்மா தங்கவில்லை .மதுரையில் பிறந்த ஒரு மாணிக்கத்தை, மதுரை மக்கள் ராணி என அழைக்கும் தடாதகை பிராட்டியை திருமணம் செய்து மதுரையில் தமிழ்சங்கத்தை ஏற்படுத்தி அதன் தலைவனாக தானே இருந்து சிறப்பு சேர்த்தான். தடாதகை எனும் மீனாட்சியை திருமணம் செய்ததோடு அவன் தமிழ்பற்று அடங்கியதா? தமிழ் என்பது அவன் குழந்தையாச்சே? அது எப்படி பிள்ளைப்பாசம் விடும்? தமிழ்சங்கத்தை நிறுவியதோடு நில்லாமல் மதுரையம்பதியின் மன்னனாய் பொறுப்பேற்று 

உக்கிரபாண்டியப்பெருவழுதி எனும் பெயரோடு பாண்டிய அரசனாய் பொறுப்பேற்று மீனாட்சி தேவியுடன் அரசாண்டார் சிவன்.
இப்படி செய்துபார்த்தும் சிவனின் பிள்ளைப்பாசம் அடங்கியதாய் தெரியவில்லை.தமிழை குழந்தையாய் கொஞ்சிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் தவிப்பாய் தகித்தது.அந்தப்பிள்ளையை பெறும் பெருமையை கூட தன் மனைவிக்கு அவன் தரவில்லை.முழுக்க முழுக்க அது தன் பிள்ளையாய் இருக்க வேண்டும் என்றெண்ணி தன் ஞானத்தை தன் நெற்றிக்கண்ணில் செலுத்தி தமிழை தன் மகவாய் பெற்றெடுத்தான்.அந்த செல்வன் தான் தமிழ்க்கடவுளாம் முருகன்.
கார்த்திகைப்பெண்கள் வளர்த்து சரவனப்பொய்கையில் பிறந்த அந்த கன்னித்தமிழின் கடவுளை கண்டதும் சிவன் ஆனந்தத்தில் ஆழ்ந்தான்."அழகே" என்று தமிழை பெயர் சொல்லி அழைத்தான்.அழகுக்கு தூய தமிழில் 'முருகு' என்று பெயர்.

தமிழாய் வளர்ந்த என் முருகன் தன் அப்பனை மிஞ்சிய ஞானவானாய் திகழ்ந்தான்.சிவன் முன்பு தமிழை டமருக்கு நாதத்தில் பிரணவ மந்திரமாய் படைத்தான்.அதே தமிழை மீண்டும் முருகனாய்,பிரணவநாதனாய் படைத்தான்.தன் குழந்தை தன்னை விட ஞானியாய் திகழ்வதை கண்டு அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
"பிரணவ மந்திரத்தை சொல்லுடா முருகா" என அழைத்தான்.சுப்பய்யன் சும்மா சொல்லுவானா?"என்னிடம் கைகட்டி,வாய்பொத்தி உட்கார்ந்து கேள்.அப்போதுதான் சொல்லுவேன்" என பிள்ளைத்தமிழில் சொன்னான் சரவணபவன்.

தமிழ்முன் மண்டியிட்டு அமர்ந்தான் சிவன்.அப்பனுக்கு பாடம் சொல்லி சாமிநாதன் சிவகுருநாதனாய் திகழ்ந்தான்.அது தன் பிள்ளையிடம் விளையாடிய தகப்பனின் அன்பு மட்டுமல்ல.தான் பெற்றெடுத்த மகவான தமிழிடம் மயங்கிய கவிதை ரசனை.
குழலினிது,யாழீனிது என்பர் தம்மக்கள்
                   மழலை சொல் கேளாதவர்
எனும் ஐயன் குறளுக்கேற்ப மூவுலகுமும் அடிபணியும் சிவபெருமான் தன் மழலையின் தமிழுக்கு மயங்கிய சம்பவம் அது. அத்தோடு விட்டான சிவன்?தன் மகனுக்கு மணப்பெண்ணையும் தமிழ்நாட்டிலேயே தேர்ந்தெடுத்தான். என்னாட்டவர்க்கும் இறைவனான அந்த சிவன் தென்னாடுடையவனாக மாறி வேடுவர் குலப்பெண் வள்ளியை முத்தோன் கணேசன் மூலம் தனது மருமகளாக்கிக்கொண்டான்.
இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ் தேனையும் பருக சிவனுக்கு அவ்வளவு ஆனந்தம்.இயற்றமிழயும்,இசைத்தமிழையும் மதுரயம்பதி தமிழ் சங்கத்தில்பருகினான். நாடகத்தமிழை எங்கே பருகுவது? சிதம்பரத்துக்கு வந்தான்.
நாட்டிய சபை ஒன்றை அமைத்து சபாநாயகனாக தானே அமர்ந்தான்."சபாபதி" என்ற பெயர் அவனுக்கு வந்தது அப்போதுதான்.சபாபதி,சபாநாயகன் என்று எந்த பெயரில் அழைத்தாலும் அது சிவனைத்தான் குறிக்கும்.
வைணவம் மட்டும் இளைத்ததா?அரங்கத்துக்கு நாயகனாக அரங்கநாதனை கொண்டது வைணவம்.சிவனின் ஆனந்த நடனத்தில் தன்னை மறந்த அரஙகத்து நாயகனான அரங்கநாயகன் 'நடராஜா' என தன் மச்சினனை அழைத்து அரங்கத்து அம்மா கால் பிடிக்க,தும்புரும்,நாரதனும் கீதமிசைக்க பாம்பணையில் பாற்கடலில் பள்ளிகொண்டபடி தங்கையின்,தங்கை கணவனின் களிநடத்தை ரசிக்க தொடங்கிவிட்டான்.
இயல் இசை நாடகம் என முத்தமிழையும் இப்படி வளர்த்தவன் சிவன். சிவன் மட்டுமல்ல அவன் குடும்பமே தமிழ் தான்.

No comments:

Post a Comment