ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Tuesday 1 November 2016

உலகின் சிவன் கோவில்கள்......



     Image result for ancient lord shiva temple discovered at mexico      

சைவ சமயம் இமயம் முதல் குமரி வரை பரவியிருக்கின்றது. தமிழ்நாட்டில் சைவசித்தாந்தம் என்றும், கன்னட நாட்டில் சைவசித்தாந்தம் என்றும், கன்னட நாட்டில் வீரசைவம் அல்லது இலிங்காயதம் என்றும், காஷ்மீரில் காஷ்மீரசைவம் அல்லது பிரத்ய பிக்ஞா சைவம் என்றும் சைவசமயம் ஆங்காங்கே தனிச்சிறப்பாக நிலவி வருகின்றது.
சைவசமயம் மிகத் தொன்மை வாய்ந்த்து ஹரப்பா, மொகஞ்சதாரோ என்னும் இடங்களில் அகழ்வு ஆராய்ச்சிகள் நிகழ்த்திய சர்ஜான் மார்ஷல் போன்ற பேரறிஞர்கள் சைவசமயமானது உலகத்திலேயே மிகவும் பழைமையான உயிர்ப்பாற்றல் மிக்க சமயமாக இருந்து வருகின்றது என்று ஆராய்ந்து கூறியுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் மனித வரலாற்றைப் பல காலங்களாகப் பிரித்துள்ளனர். அவை பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், வெண்காலம் எனப் பலவகைப்படும். "பழைய கற்காலம்" என வழங்கப்பெறும் அக்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருத்திருக்கிறது.

வட அமெரிக்காவில் கொலரடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது ஒரு சிவன் கோயிலும் அதில் ஒரு சிவன்கோயிலும் அதில் ஒரு பெரும் சிவலிங்கமுக் 1937 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கோயில் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நிருபித்துள்ளனர்.

ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிவுற்ற நிலையில் உள்ளன. இங்குள்ள டெகால் என்ற ஆற்றிலிருந்து. சிவபெருமானின் செப்புச்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஜாவாத்தீவில் உள்ள கோயில்களில் இன்றும் திருவாசகம் ஓதப்படுகிறது. அங்கிருப்பவர்க்குத் தமிழ்மொழி தெரியாதபடியால் ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகிறார்கள். மேலும் ஜாவாவில் உள்ள பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன்கோயில் சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன.

சுமத்திராவில் அழிபாடுற்ற சிவன் கோயில் உள்ளது. இங்கே அர்த்தநாரி வடிவம், கணபதி சிலை, நந்திசிலை உள்ளன.

போர்னியாவில் ஒரு மலைக்குகையில் சிவன், விநாயகர் சிலை உள்ளன.
சியாம் நாட்டிலும் கம்போடியாலும் சிவலிங்கத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. சியாமில் பழைய சிவன் கோயில் இருக்கிறது. இக்கோயில் உள்ள இடத்தில் இப்போதும் பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது.

பாபிலோனியாவில் நிகழ்ந்த அகழ்வராய்ச்சியில் 6000 ஆண்டுகட்கு முற்பட்ட சிவாலயங்களும் சிவாலயத்தின் வழிபாடுகளும் கிடைத்துள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் ஏட்டில் சிவன் என்ற பெயர் காணப்படுகிறது. பாபிலோனியர் தம் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயர்களில் எல்சடை என்று ஒரு பெயர் காணப்படுகிறது. இச்சொல் சூரியனைப் போன்ற சிவந்த சடையுடையவன் என்று பொருள் தருவதாக இருக்கிறது. இங்கே கிடைத்த சிவபெருமானின் சிலை காளையின் மீது நிற்பதாகவும் கையில் மழுவும், இருபுறமும் முத்தலையுடைய சூலமும் ஏந்தியதாகவும் காட்சியளிக்கிறது. பாபிலோனியரின் "மாதப் பெயர்களில் ஒன்று சிவன்" பெயர் கொண்டிருக்கிறது.

சிரியா நாட்டில் சிவன் சிலையும் சிவன் உருவமும் பொறித்த வெண்கலத் தட்டும் கிடைத்துள்ளன. இத்தட்டில் உள்ள உருவம் தந்தைக் கடவுளின் வடிவம் என்று கூறுகின்றனர். இவ்வுருவம் வலக்கையில் மழுவும் இடக்கையில் ஆறு முனையுள்ள இடியேறுந் தாங்கி இடபத்தின் மேல் நிற்பதாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது.

எகிப்தில் உள்ள "பாலைவனம் ஒன்றுக்கு சிவன்" என்று பெயர் வழங்கி வருகிறது. இங்கு வாழும் மக்கள் அமன்யூ என்ற கடவுளை வணங்குகின்றனர். அக்கடவுளுக்கு இடபம் வாகனமாக இருக்கிறது.
கிரேக்க நாட்டில் சிவலிங்கங்களை பொது இடங்களில் எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி வைத்துள்ளனர்.

பெளத்த மதத்தில் ஒரு பிரிவான ஷிண்டோயிசம் என்பதில் சிவலிங்கத் திருவுத்திற்குப் பெருமதிப்புத் தரப் பெற்று வருகின்றது.
இவை அணைத்திற்கும் மேல் வடக்கே இமயமலைக்கு அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால் ஆன சிவலிங்கத் திருவுருவம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகின்றது.

மேற்கூறப்பட்ட சான்றுகளினால் உலகின் பல்வேறு இடங்களிலும் சிவன் கோயில்களும் சிவவழிபாடும், சிவனின் பல்வேறு நிலையில் அமைந்த உருவங்களும் விழாக்களும் நடந்து வந்தன என்பதனை அறிகின்றோம். சிவலிங்கத்தைப் பிரதானமாக வைத்து, ஏனைய சிவமூர்த்தங்களை திருக்கோயில்களில் விளங்கும் கோபுரங்கள், விமானங்கள், கோஷ்டங்கள் ஆகிய இடங்களில் கற்சிலாவாகவும், சுதை வடிவாகவும், உற்சவமூர்த்திகளாகவும் பின்னாளில் நமது முன்னோர்கள் அமைத்து வழிபடலாயினர்.

No comments:

Post a Comment