சிவயோகத்தில்
"சப்த பிரம்ம யோகம் " என்றதவமுறை உள்ளது, இது சிவனால் சக்திக்கு நேரிடையாக சொல்லிகொடுத்த
தவ முறையாகும் . இதை
எந்த வயதினரும்செய்யலாம் திடமான
மனம் மட்டும் போதும் .
செய்முறை : நீராடி உடல் சுத்ததோடு தீபம் ஏற்றி பின் குருவருள்
கேட்டு ( யோக குரு இல்லாதோர் ஈசனை
குருவாக ஏற்க்கலாம் ) சிவபக்தியுடன்
சுகாசனத்தில் அமர்த்தல் வேண்டும் . பின்பு
" தர்ஜனீ " என்று சொல்லப்படும் மோதிர
விரலால் இரண்டு காது துவாரங்களையும்
அடைத்துக்கொள்ள வேண்டும் . கண்கள்
மூடிய நிலையில் இருக்கும்போது
இம்ம்ம் எனும் சப்தம் கேட்கும்.
இந்த சப்தத்ததையே
மனம் கவனித்தல் வேண்டும் . இதே
போல் தினமும் 10 நிடங்களில் ஆரம்பித்து
48 நிமிடங்கள் வரை நேரம் உயர்த்த
வேண்டும் .பின்பு தினமும் 48 நிமிடம் 6 மாதம்
சரியாக செய்தாலே யோகம் கைகூடும். இந்த
6 மாதமும் சம்சார பந்தம் விலக கூடாது. இந்த தவம் கைகூடும்போது ஈசா சக்தியானது
அடி வயிற்றில் ஜடாரக்னீயாய் சூழல
ஆரம்பிக்கும்.அப்போது இந்த சக்தியோடு
குண்டலினியும் சேர்ந்து 9 ஓசை களாக தவம்
செய்வோர்க்கு ஈசன் அருள் புரிவான் .அப்போது
அங்கே " சப்த பிரம்ம ஞானம்" உண்டாகும்
. இந்த எளிமையான முறையை எல்லோரும்
செய்யலாம் . இந்த தவம் செய்யும்
போது ஈசன் 9 ஓசை
இந்த யோகமுறையை சரியாக
அப்பியாசம் செய்பவர்களின்
உடலில் ஈசன் 9 வகை சப்தங்களாக சாதர்களுக்கு
தன்னை உணர்த்துவான்
.
1.கோஷம் : இந்த
சப்தநிலை கேட்டு தவம்
செய்பவர்க்கு சர்வ
ரோகங்களிலும் இருந்து
விடுதலை பெறுவான்.
ஆத்ம சுத்தம் வசீகரம்
முதலிய சிததிகளை
ஈசன் அருளுவான் .
2.காம்ஸ்யம் :
இந்த சப்தநிலை கேட்டு தவம்
செய்பவர்க்கு பூதங்கள்
பேய் பிசாசுகளை யும்
எல்லாவித ஜீவ வசியமும்
ஈசன் அருளுவான் .
.
3. சிருங்கம்
: என்கிற கொம்பின் நாதத்தை
அப்பியாசிப்பவன்
சத்த்துருக்களை அழிக்கவும்
தனது இஷ்டப்படி
எல்லோரயும் நடக்க
வைக்கவும் சித்தியை
ஈசன் வழங்குவான் .
4. கண்டாமணி :
இந்த சப்தம் கேட்டு
அப்பியாசிப்பவனுக்கு
தேவர்களை தன்னிடம்
வரவழைக்கும் சித்தியை
அருளுவான் .
5. வீணா : இந்த
சப்தத்தை கேட்டு அப்பியாசம்
செய்பவர்க்கு ஈசன்
தூர திருஷ்டி வல்லமை
தருவான் .
6. புல்லாங்குழல்
: இந்த ஓசையை கேட்டு
தவம் செய்பவர்க்கு
சர்வ ஞானியாவான் .
7. தூந்துபி :
இந்த ஓசை கேட்டு தவம்
செய்பவன் ஈசானால்
ஜனன மரண பந்தம்
விலக்குவான் .
8. சங்க நாதம்
: இந்த ஓசை கேட்டு தவம்
செய்பவனுக்கு வேற்று
உடலில் இயங்கும்
சக்தி அருளுவான்
.
9. மேக நாதம்
: இந்த ஓசை கேட்டு தவம்
செய்பவர்க்கு ஆகாயத்தில்
சஞ்சரிக்கும் சித்தி
அருளுவான் .
இந்த 9 நிலைகளிலும்
மயங்கி விழாமல் பற்று இல்லாமல் சிவமே
வேண்டும் என தவம் செய்வோர்க்கு சிவசக்தி
ரூப தரிசனம் கிட்டும்
.இந்த சப்த பிரம்ம
யோகம் செய்யும்போது உடலில் ஏற்படும்
உபாதைகள் அதில் விடுபடு வடிவங்களாய்
உங்களுக்குள் நிற்பான். பொதுவாக எல்லோர்க்கும்
உடல் எதிர்ப்பு சக்தி அளவு நம் உடலில் உயிர்
சக்தியின் இருப்பு அளவை பொறுத்தே அமையும்
. அதிலும் எந்தமுறை யோகம் செய்தாலும்
இது முக்கியமான ஒன்று
.
1. பிரம்ம சரிய
அனுஸ்ட்டானத்தால் உயிர்
சக்தியை கூட்டிக்
கொள்ளுதல் .
2. மோதிர விரல்களை
அதிகம் அழுத்த கூடாது குறிப்பிட்ட
நேரத்திற்க்கு ஒருமுறை விரல்களை எடுத்து
வெளி காற்று காதில் உட்புக வாய்ப்பு
தரவேண்டும் . முழங்கை வழி இருக்கும் குறிப்பிட்ட
நேரம் கடந்து ( 10
நிமிடம்) கைகளை
நீட்டி மடக்க வேண்டும்,கண்டிப்பாக சுகாசன
முறையே பின்பற்றுதல் வேண்டும் . கீழே
அமர இயலாதோர் இருக்கையில் அமரலாம்.
3. காதுகளில் நீர்
ஏற விடுதல் , சுத்தமின்மை ஆகாது .காது உஷ்ணம்
நமக்கு தெரிய வரும்போது விரல்களை
அகற்ற வேண்டும் ,அப்போதே தியானம்
களையலாம் கொஞ்சம் கொஞ்ச மாக நேரத்தை
கூட்டலாம் ,இதனால் காதில் சீல் கட்டுதல்
இருக்காது .
4. எந்தவகை தியானத்திலும்
காற்றை எந்த இடத்தில் அதிகம்
அதிக நேரம் நிறுத்தி வைக்கிறீர்களோ
அந்த இடத்தில் உஷ்ணம் அதிகமாக்கும் ஆதலால்
அந்த இடம் சிரமத்திற்க்கு ஆளாகும் . காது
தியான உஷ்ணம்
ஏற்றுக்கொள்ளும்
வரை கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கூட்டலாம்
.
5. தியானம் கலைந்ததும்
வலது பக்க காதை அடைத்துக்கொண்டு
மூச்சை நன்றாக இழுத்து வெளியிட வேண்டும்
. பின்பு இடது காதை அடைத்து மூச்சை
நன்றாக இழுத்து வெளியிட வேண்டும்
. இப்படி 3 - 3 முறை
செய்தால் தியானம்
முடிந்ததும் காதில் இருக்க தன்மை இருக்காது
.
6. காதில் மோதிரவிராலால்
அடைத்துதியானம் செய்யும்போது
ஏற்படும் சப்தத்தை வயிற்று பகுதியில்
( மணிப்பூரகம்-தொப்பிள் ) சப்தம்
ஏற்படுவது போல் மனத்தை அங்கேயே கவனிக்க
வேண்டும் .
7. கண்டிப்பாக
பிரம்ம சரிய விரதம்
கடைபிடித்தால்
90 % உடல் உபாதைகள் வராது
---------------------------------------------------****திருசிற்றம்பலம்*****-------------------------------------------
No comments:
Post a Comment