ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய

Saturday, 23 July 2016

திருமுறையை உணர்ந்து படி


        
 ஒரு பதிவில் #திருமுறையை_உணர்ந்து_படி_!! என்று கூறியுள்ளிர்கள் எப்படி படிப்பது என்று கூறவும் ?? என்ற கேட்ட இளம்அடியார் ஒருவருக்கு பதிலே இப்பதிவு !!!

நமசிவாய
திருமுறை நாயகன் திருவடி போற்றி

திருமுறை யாது ?
சிவத்தால் ஆட்கொள்ளப்பட்டு அகமும் புறமுமாய் அவன் திருவருளை அனுபவித்து, அந்த அனுபவத்திலேயே தன்னை இழந்து சிவமாக ஆகிய அருளாளர்கள், தம் உணர்ந்ததை தான்பெற்ற சிவானுபவத்தை அனைவரும் பெறவேண்டி அருளிய பாடல்களே !! திருமுறைகள்,
திருமுறைகள் தமிழ் என்றாலும்கூட புரியவில்லை ??
ஆம் இன்றைய காலகட்டத்தில் நம் பேசும் தமிழில் வடமொழி - ஆங்கிலம் - வாழும் ஊருக்கான சில வார்த்தைகள், என்று கலந்துள்ளது,
அதில் பழக்கப்பட்டு போன நமக்கு, அன்றைய சங்கத்தமிழ் புரியாதுதான் !!
அது உனக்கு புரியவேண்டும் !!!, அதன்மூலம் உன்னுள் உள்ள அனைத்துமானவன் உனக்கு புலப்பட வேண்டும் !!!, என்று உனக்கானவன் கருதியதால் தான் !!, திருமுறைகள் படிக்கவேண்டும் என்ற எண்ணமும் !!! அதற்காக இப்பதரை கொண்டு இப்பதிவும் !!!
சரி எப்படி பொருள் உணர்ந்து படிப்பது ?? அதன்மூலம் சிவத்தை அனுபவிப்பது எவ்வாறு ??
திருமுறைகள் மூலம் தன்னை உன்னுள் உணர்த்தி, நடக்கும் நிகழ்வுகளில் அவர் கருணையை உனக்கு உணர்த்தி, உன் உயிருக்கு உரியவனை, பலபிறவியில் உணரப்படாதவனை, இப்பிறவியில் அடையவே !!
திருமுறை பாடல்களை பாடவிட்டு அதனுடன், திருமுறை பாடல்கள் கொண்ட புத்தகம் கொண்டு வாசிக்க தொடங்குங்கள், இது முதல்நிலை,
நித்தம் மேல்கூறிய வண்ணம் செய்யச்செய்ய உங்களுக்குள் ஒரு மற்றம் நிகழ்வதை சர்வநிச்சியமாக உணர்விர்கள், இது இரண்டாம் நிலை,
அடுத்தடுத்து அப்பாடல்களை கேட்க்ககேட்க அந்த பாடல் வரிகளின் பொருளை உனக்கானவன் உணர்த்துவான், இது முன்றாம் நிலை,
பொருளை உணர்த்தும்போதே தன்னையும் உங்களுக்குள்ளே உணர்த்துவான்,
( எப்படி என்றால் - " தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி " - என்ற பாடல் வரிகளை கேட்கும்போது நமது மனக்கண்ணில் அழகிய தோடு அணிந்த காதுகள் உடைய, தூய வெண்ணிற பிறை சந்திரனை தான் தாழ்சடைமீது சூடிய சிவபெருமான் தோன்றுவார் )
அப்படி அனுபவித்து பாடி அவனுடன் உருகி கண்ணீர் வரும்,
இந்த அனுபவத்தை சிவனுபவமாக பெறலாம்,
எனக்கு திருமுறைகளில் எத்தனை பதிகங்கள் தெரியும் என்பது முக்கியம் இல்லை !!
ஒரு பாடலில் உள்ள நான்கு வரி தெரிந்தால்கூட போதும் அதை உணர்ந்து அப்பாடலில் சிவத்தை அனுபவித்து பாடவேண்டும் !!
மேல்கூறிய யாவும் சிவனருளால் அடியேன் பெற்ற அனுபவமே !!
இதுவே சிறந்தமுறை என்று சொல்லவில்லை !!!!!!!
இதுவும் ஒரு முறை என்று கருதியதன் விளைவே இப்பதிவு !!!
யாருக்கு என்று தீர்மானித்து !!! எம்மை கொண்டு பதிவிட வைத்த ஈசன் திருவருளுக்கு நன்றி !!
திருச்சிற்றம்பலம்

அனுபவிக்க அலுக்காதவன்                            நன்றி முகநூல்
திருவருளால்
அடியேன்
அங்கமுத்து குமார்

No comments:

Post a Comment